/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் துவக்கி வைப்பார் மதுரையில் அமைச்சர் நேரு உறுதி
/
முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் துவக்கி வைப்பார் மதுரையில் அமைச்சர் நேரு உறுதி
முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் துவக்கி வைப்பார் மதுரையில் அமைச்சர் நேரு உறுதி
முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் துவக்கி வைப்பார் மதுரையில் அமைச்சர் நேரு உறுதி
ADDED : ஜன 13, 2025 04:14 AM

மதுரை : மதுரை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும் வகையிலான முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை வரும் மார்ச்சில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என அமைச்சர் நேரு உறுதியளித்தார்.
மதுரையில் கிழக்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, தெற்கு தொகுதிகளில் விடுபட்ட மாநாராட்சி வார்டுகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடியில் 500 கி.மீ., துாரத்திற்கான புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை நேரு உத்தங்குடியில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் தலைமை வகித்தனர். கலெக்டர் சங்கீதா வரவேற்றார். மேயர் இந்திராணி பொன்வசந்த், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் நேரு பேசியதாவது: மதுரை வளர்ச்சிக்காக 3 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடி திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளுக்கு ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.1559 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் 140 எம்.எல்.டி., குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும் 125 எம்.எல்.டி., குடிநீருக்காக ரூ.1695 கோடியில் புதிதாக பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு குடிநீருக்காக மட்டும் ரூ.3,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மார்ச்சில் திறக்கவுள்ளார். இதற்காக முதல்வரை அழைக்க அமைச்சர் மூர்த்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதுபோல் மதுரையில் சேதமடைந்துள்ள, புதிய ரோடுகளுக்காக ரூ.130 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதை அதிகரித்து ரூ.190 கோடியாக முதல்வர் வழங்க இருக்கிறார். ரோடு பணிகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி, பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், கயிலைசெல்வன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கமிஷனர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.
மேலுாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
மேலுார் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கர்னல் பென்னிகுயிக் பஸ் ஸ்டாண்ட், அறிவுசார் மையம் மற்றும் நுாலகம், நகராட்சி துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் சங்கீதா, நகராட்சி தலைவர் முகமது யாசின் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் நேரு புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசுகையில், ''மேலுாரில் ரூ. 300 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
நகராட்சி கமிஷனர் பாரத், பொறியாளர் முத்துக்குமார், நகை மற்றும் அடகு கடை முன்னேற்ற நல சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ், முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.