ADDED : ஆக 06, 2025 01:10 AM
பாலமேடு; பாலமேடு பேரூராட்சி கிழக்கு தெருவில் ரூ.52 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடம் திறப்பு விழா வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ''திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகளை ஊக்கப்படுத்துகிறார்.
தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் மகத்தான மருத்துவ சேவை வழங்குகிறார். அவரே மீண்டும் 2026ல் முதல்வராகி, மக்கள் நலத்திட்டங்களும் தொடரும்'' என்றார்.
ஆதிதிராவிடர் நலக் குழு துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் சசிகலா, பேரூராட்சி தலைவர் சுமதி, தி.மு.க., அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, துணைத்தலைவர் ராமராஜ் பங்கேற்றனர்.
வெள்ளையன்பட்டியில் கட்டப்பட்ட புதிய கிராமச் சாவடி, ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.