/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹிந்து மதம் பற்றி அவதுாறு கருத்து அமைச்சர் பொன்முடியை நீக்க வேண்டும் த.மா.கா.,வாசன் வலியுறுத்தல்

ADDED : ஏப் 13, 2025 04:17 AM
மதுரை : ''ஹிந்து மதம் பற்றி அவதுாறாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்,'' என த.மா.கா., தலைவர் வாசன்கூறினார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் வாசன் தலைமையில் மதுரையில் நடந்தது.
அவர் கூறியதாவது: அமைச்சர் பொன்முடி பொறுப்பற்ற முறையில் கீழ்த்தரமாக, அவதுாறாக, முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார். அவரை கட்சி பதவியிலிருந்து நீக்கியது மட்டும் போதாது.அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்.
தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க., கூட்டணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டு கண்மூடித்தனமாக பேச துவங்கியுள்ளனர். தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி ஏற்பட்டுள்ளது. அதில் ஒத்த கருத்துள்ள பல கட்சிகள் மேலும் சேர வாய்ப்புள்ளது. தென்மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு, போதைப்பொருட்கள்விற்பனை அதிகரித்துள்ளது.
வக்பு வாரிய மசோதாவை வார்த்தை, வரிவிடாமல் படித்து ஆதரவு தெரிவித்துள்ளேன். அதில் புதிய கோட்பாடுகள் உள்ளன. இதனால் ஏழை, நடுத்தர முஸ்லிம்களின் வாழ்வாதாரம் மேம்படும். நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு பாலமாக இருப்போம் என்றார்.