/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் 6 அருங்காட்சியகங்கள் அமைக்க திட்டம் தொல்லியல் கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
/
தமிழகத்தில் 6 அருங்காட்சியகங்கள் அமைக்க திட்டம் தொல்லியல் கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தமிழகத்தில் 6 அருங்காட்சியகங்கள் அமைக்க திட்டம் தொல்லியல் கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தமிழகத்தில் 6 அருங்காட்சியகங்கள் அமைக்க திட்டம் தொல்லியல் கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
ADDED : ஜன 23, 2026 03:34 AM

மதுரை: ''தமிழகத்தில் புதிதாக ஆறு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, மதுரையில் மூன்று நாட்கள் நடக்கும் சர்வதேச தொல்லியல் கருத்தரங்கை துவக்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக தொல்லியல் துறை சார்பில், 'தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்' என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
சிவகளை அகழாய்வின் மூலம் தமிழகத்தில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்ததையும், ஆதிச்சநல்லுார் அகழாய்வின் மூலம், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே நஞ்சை, மானாவாரியில் நெல், சிறுதானியங்கள் சாகுபடி செய்துள்ளதையும் நிரூபித்துள்ளோம்.
தென்னிந்தியாவில் இரும்புக் காலம் சிந்து சமவெளி நாகரிகத்துடன் சமகாலத்திலிருந்ததை, 15,000த்திற்கும் மேற்பட்ட எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவை, 90 சதவீதம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக உள்ளன.
மதுரை காமராஜ் பல்கலை, ஹார்வர்டு பல்கலையுடன் இணைந்து சிவகளை, கொந்தகை, கொடுமணல், மயிலாடும்பாறை, கீழ்நமண்டி அகழாய்வு மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். கீழடி, பொருநையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது .
அழகன்குளத்தில் நாவாய் அருங்காட்சியகம், தஞ்சாவூர், கங்கைகொண் ட சோழபுரத்தில் சோழ அருங்காட்சியகம், தர்மபுரியில் நினைவு கல் அருங்காட்சியகம், பெருந்துறையில் நொய்யல் அருங்காட்சியகம், மாமல்லபுரத்தில் கலாசார அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளன.
இந்த அருங்காட்சியகங்கள் தமிழக வரலாற்றின் அறிவியல், தொழில்நுட்ப பயன்பாடு, கடல் கடந்த வர்த்தகம், கடல்பயண தொழில்நுட்பங்களை விளக்குவதாகவும், இந்தியாவில் தமிழகத்தின் கலாசாரத்தை காட்சிப்படுத்துவதாகவும் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் பிரவீன்குமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன், கனடாவின் மானுடவியல் துறை ஆய்வாளர் பீட்டர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளை வரை, மதுரை மேரியாட் கோர்ட்டியாட் ஹோட்டலில் சர்வதேச தொல்லியல் துறை கருத்தரங்கு, கண்காட்சி நடக்கிறது.

