10 நாட்கள் போர் நீடித்தால் ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும்; எச்சரிக்கும் பென்டகன்
10 நாட்கள் போர் நீடித்தால் ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும்; எச்சரிக்கும் பென்டகன்
ADDED : மார் 04, 2026 08:28 AM

வாஷிங்டன்: இன்னும் 10 நாட்களுக்கு போர் நீடித்தால் முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு அடிபணியாத ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, ஒரு வாரத்தில் போர் முடிந்து விடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், நீண்ட காலப் போருக்கும் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.தற்போது, 5வது நாளாக போர் நடந்து வரும் நிலையில், இன்னும் 10 நாட்களுக்கு போர் நீடித்தால் முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, எஸ்எம்3 போன்ற இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

