ADDED : அக் 23, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம், : மதுரையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார்.
மதுரை செல்லும் முன் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வெளி நோயாளிகள் வருகை, அவர்களுக்கான சிகிச்சை, கர்ப்பிணிகள் பரிசோதனைகள், மகப்பேறு கால சிகிச்சைகள், நாய்க்கடி தடுப்பூசி இருப்பு விவரங்களை வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலையிடம் கேட்டறிந்தார். கட்டப்பட்டுள்ள ஆய்வக கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அமைச்சர் உத்தரவிட்டார். சுகாதார அலுவலர் குமரகுருபரன் உடனிருந்தார்.