/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலப்பட உரம்: விவசாயிகள் குற்றச்சாட்டு
/
கலப்பட உரம்: விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : நவ 13, 2024 04:20 AM
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் பழனிச்சாமி, மணி, கிருஷ்ணன், கதிரேசன், பாண்டி, துரைசிங்கம், சீனிவாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் பேசியதாவது: கலப்படமான பூச்சி மருந்துகள், உரங்களை சில தனியார் உரக்கடைகளில் விற்கின்றனர். பெரிய அருவி நீர்தேக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முல்லை பெரியாறு அணையில் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 57 நாட்களாகியும் பூதமங்கலம், அட்டப்பட்டி மந்திபிச்சான் உள்ளிட்ட ஏராளமான கண்மாய்கள் வறண்டுள்ளன.
ஆனால் நீர்வளத்துறையினர் கண்மாய் நிறைந்து விட்டதாக தவறான தகவல் கொடுக்கின்றனர். மேலும் ஒரு போகத்திற்கு ஒரு விநாடிக்கு திறக்க வேண்டிய 440 கன அடிக்கு பதிலாக 295 கன அடி மட்டுமே திறக்கின்றனர். புதுசுக்காம்பட்டி கண்மாயில் உள்ள மூன்று மடைகளில் ஒரு மடையில் மட்டுமே குழாய் பதித்துள்ளனர். அதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தும் மோட்டார் தண்ணீரை பயன்படுத்துகிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்காததால் உரம் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றனர்.

