/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரை வழியனுப்பிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் எம்.எல்.ஏ., வாக்குவாதம்
/
முதல்வரை வழியனுப்பிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் எம்.எல்.ஏ., வாக்குவாதம்
முதல்வரை வழியனுப்பிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் எம்.எல்.ஏ., வாக்குவாதம்
முதல்வரை வழியனுப்பிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் எம்.எல்.ஏ., வாக்குவாதம்
ADDED : நவ 11, 2024 04:36 AM
அவனியாபுரம்: விருதுநகர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் 12:30 முப்பது மணிக்கு காரில் மதுரை விமான நிலையம் வந்த அவர் மதியம் 1:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், மதுரை கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் காரில் வந்த முதல்வரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
எம்.எல்.ஏ., வாக்குவாதம்
முதல்வர் ஸ்டாலின் விமான நிலையம் உள்ளே சென்ற பின்பு சிறிது நேரத்தில் அவருக்கு, சிலர் மதிய உணவு கொண்டு வந்தனர். அவர்களில் உரிய ஆவணங்களை வைத்திருந்தோரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். கடைசியாக வந்த ஒருவரிடம் பாஸ் இல்லாததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை அனுமதிக்க மறுத்தனர்.
அங்கிருந்த சோழவந்தான் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன், பாஸ் இன்றி உணவு கொண்டு வந்த அந்த நபரையும் உள்ளே அனுமதிக்குமாறு கூறினார். அவரிடமும், 'பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும். அல்லது எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலில் அவரது பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் அனுமதிக்க முடியும்' எனக்கூறி மறுத்துவிட்டனர். இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், எம்.எல்.ஏ., வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர். பின்பு பாஸ் இல்லாத நபரிடம் இருந்த உணவு கேரியர்களை விமான நிலையத்திற்குள் இருந்து வந்த மற்றொரு நபர் உள்ளே வாங்கிச் சென்றார்.