ADDED : மே 17, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய், எம்.எல்.ஏ., பதவியேற்ற பின் முதன்முறையாக தொகுதிக்கு வந்தார்.
முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின் அவர் பேசியதாவது:
பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் என்னை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சியாக இருக்கும். ஊழல், மணல் கடத்தல், போதை பொருள் விற்பனை, கட்டப் பஞ்சாயத்து இல்லாத ஆட்சியாக இருக்கும். எம்.எல்.ஏ., அலுவலகத்தில் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். விரைவில் ஒவ்வொரு கிராமமாக வந்து நன்றி தெரிவிப்பேன் என்றார்.
