நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கிடந்ததையடுத்து இரண்டாம் முறையாக நேற்றும் (அக்.11) எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆய்வு செய்தார்.
புதிதாக அமைத்த போர்வெல்லை பார்வையிட்டு, குழாய்கள் அமைக்கும் பணி குறித்து அதிகாரிகளை கேட்டறிந்தார். ஊராட்சிப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், சாக்கடை கால்வாய் சீரமைத்தல், சுகாதார வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
மண்டல துணை பி.டி.ஓ., பூர்ணிமா, உதவிமின் பொறியாளர் பாலாஜி, ஊராட்சி செயலாளர் காசிலிங்கம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், நிர்வாகிகள் பால்பாண்டியன், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.