ADDED : ஆக 07, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில் அலைபேசி தொழில்நுட்பம் குறித்து 3 நாள் பயிற்சி முதல்வர் பால்ஜெயகர் தலைமையில் நடந்தது.
துறைத் தலைவர் ஞானசேகர் வரவேற்றார். சன்செல் உரிமையாளர் விஜயக்குமார், ''கல்லுாரியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக அமைவதோடு, வேலைவாய்ப்புகளை வழங்கி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்'' என்றார்.
பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. கல்லுாரி நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம் ஏற்பாடுகளை செய்தார். ஓய்வுபெற்ற பேராசிரியர் ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.