ADDED : மார் 17, 2024 01:00 AM
மதுரை: மதுரை அரசு  மருத்துவமனை, பச்சிளம் குழந்தை நலத்துறையில் நான்கு அதிநவீன வென்டிலேட்டர்கள்  மற்றும்  மூளை செயல்பாட்டை கண்காணிக்கும் அதிநவீன கருவி (சி.எப்.எம்.,) துவக்க விழா நடந்தது.
ஏகம் பவுண்டேஷன்  நிர்வாகிகள் அன்பரசன், ராஜேஷ் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள சி.எப்.எம். கருவியை டீன் ரத்தினவேலிடம் ஒப்படைத்தனர்.
துறைத் தலைவர்  அசோக் ராஜா கூறுகையில் ''   அதிநவீன வென்டிலேட்டர்கள் அரசு நிதி மூலம் பெறப்பட்டது. புதிய சி.எப்.எம். கருவி மூலம் அதிக அளவு நுரையீரல் பாதிப்பு உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இயலும். மேலும் பிறக்கும் போது அழாமல் மூளை பாதிப்பு அடைந்த குழந்தையை சிறப்பாக கண்காணிக்க இக்கருவி உதவும்'' என்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் கணேசன், குழந்தை நலத்துறை இயக்குநர் டாக்டர் நந்தினி,
பேராசிரியர் செந்தில் குமார், ஆர். எம்.ஓ., ஸ்ரீலதா, டாக்டர் ஷியாம்  கலந்து கொண்டனர்.

