ADDED : செப் 24, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பேலஸ் ரோட்டில் உள்ள திருமலை நாயக்கர் மகாலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் சிதிலமடைந்த பொதுக் கழிப்பறையை, நவீன சுகாதார வளாகமாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மதுரை ராஜ்மஹால் நிறுவனம் நவீன வசதிகளுடன் பராமரிக்க முன்வந்தது. ரூ.16 லட்சம் செலவில் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது சுகாதார வளாகமாக கட்டப்பட்டது. இதனை மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கோபீசன், ராஜ்மஹால் நிர்வாகி ராஜவிநாயக் திறந்து வைத்தனர். இதில் மேலாளர் விக்னேஷ், த.வெ.க., பகுதிச் செயலாளர் சிவா, ஊடகப்பிரிவு செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
