நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லுார் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் சீனிவாசபெருமாள் கோயில், அலங்காநல்லுார் ஒன்றியம் பெரிய இலந்தைகுளம் இலந்தை அழகர்கோவில் ஆஞ்சநேயர் மற்றும் புதுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்களில் ஹிந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டி வழிபாடு செய்தனர். ஒன்றிய தலைவர்கள் ராஜசேகர், சுவேந்திரன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.