UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் 70வது வார்டு பா.ஜ., சார்பில் நேருநகர் காவியன் அபார்ட்மென்டில் மோடி தீபாவளி நிகழ்ச்சி நடந்தது.
கட்சி நிர்வாகி ராஜசேகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கதலி நரசிங்கப்பெருமாள், நகர் தலைவர் மாரிசக்ரவர்த்தி, மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கப்பட்டன.
