நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஊரக வளர்ச்சி துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
லட்சுமி காந்தம், வள்ளி, கலைச்செல்வி, வட்ட வழங்கல் அதிகாரி ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிக்குமார் ஆலோசனை வழங்கினார்.
வாடிப்பட்டி, அலங்காநல்லுார் ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். வட்ட வழங்கல் ஆர்.ஐ., சந்தானம் நன்றி கூறினார்.