நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தபால் தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்க மாதாந்திர கூட்டம் மதுரை சவுராஷ்டிரா பள்ளியில் நடந்தது. மாதந்தோறும் 3வது ஞாயிறு நடைபெறும் கூட்டத்தில் வயது வித்தியாசமின்றி ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த மாத தலைப்பு 'வாழைப்பழ பணம்' பற்றி 12 ஆம் வகுப்பு மாணவர் அன்பு சிதம்பரம் பேசினார்.
தான் சேகரித்து வந்த 'வாழைப்பழ பணம்' என்றழைக்கப்படும் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய ஜப்பான் ஆக்கிரமிப்பு மலேசியாவின் கரன்சியை அனைவரின் பார்வைக்கு எடுத்து வைத்தார். ஏற்பாடுகளை தலைவர் சுவாமியப்பன், பொருளாளர் மாதவன் செய்திருந்தனர்.