/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்: மதுரை வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு

ADDED : ஜன 07, 2025 05:16 AM

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2025 தேதியை தகுதிநாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மதுரையில் கலெக்டர் சங்கீதா வெளியிட்டார். நேர்முக உதவியாளர் ஜெயந்தி, ஆர்.டி.ஓ., ஷாலினி மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இப்பட்டியல்படி மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் மொத்தம், 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 13 லட்சத்து 40 ஆயிரத்து 159 பேர். பெண்கள் 13 லட்சத்து 89 ஆயிரத்து 224 பேர். புதிய வாக்காளர்கள் 59 ஆயிரத்து 187. இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கு மேலான பதிவுகள் படி நீக்கம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 351.
தற்போதைய நிலையில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 612 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 114 வாக்காளர்களும் உள்ளனர். இந்த இறுதிப்பட்டியல் அனைத்து தாலுகா, ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்,ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் இருக்கும். வாக்காளர்கள் தங்களுக்கான பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களும் அதற்கான படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.