/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து உரிமை மீட்புக்குழு 400க்கும் மேற்பட்டோர் கைது
/
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து உரிமை மீட்புக்குழு 400க்கும் மேற்பட்டோர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து உரிமை மீட்புக்குழு 400க்கும் மேற்பட்டோர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து உரிமை மீட்புக்குழு 400க்கும் மேற்பட்டோர் கைது
ADDED : டிச 05, 2024 06:09 AM

மதுரை: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டுள்ளது. அங்கு பல ஹிந்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதைகண்டித்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கான வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்புக்குழுவிவர் ஹிந்துமுன்னணி மாநில அமைப்புச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் கூடினர். அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சுவாமி வேதானந்தா, ராமகிருஷ்ண தபோவன சுவாமி பரமானந்த ஜி மகராஜ், சின்மயா மிஷன் ஜிதேஷ் சைதன்ய மகாராஜ் பேசியதாவது:
ஹிந்து அடையாளத்துடன் இருப்பவரை கொல்வதை ஏற்க முடியாது. வங்கதேச அரசு அப்பாவி சன்னியாசிகளைகைது செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திலும் பல ஆண்டுகளாக ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஹிந்து மத உணர்வை கொச்சைப்படுத்துகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை. நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் வருவதே நமக்கு பாதுகாப்பை அளிக்கும் என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர்கள் மகாசுசீந்திரன், சசிகுமார், ராஜசிம்மன், ஐ.டி., பிரிவு துணைப் பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், மீனவரணி நிர்வாகி சிவபிரபாகரன், பார்வையாளர்கள் ராஜரத்தினம், ஏ.ஆர்.மகாலட்சுமி, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், நிர்வாகிகள் முரளிபாஸ்கர், வெள்ளைச்சாமி, ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக் மகேஷ், மங்களமுருகன், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்துமுன்னணி, ஹிந்து மக்கள் கட்சியினர் பங்கேற்றனர்.
தடையை மீறி ஆர்ப்பாடம் செய்ய முயன்ற 400க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.