ADDED : பிப் 23, 2026 05:30 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை புரட்சிப் பாவலர் மன்றம் சார்பில் உலக தாய்மொழி நாள் கருத்தரங்கு நடந்தது. மன்றத் தலைவர் பி. வரதராஜன் தலைமை வகித்தார். இலக்கியப் மன்றத் தலைவர் கவிஞர் மு. செல்லா முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தகுமார் கருத்தரங்கை துவக்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முத்தையா வரவேற்றார். கவிஞர்கள் பேனா மனோகரன், ஜி. மஞ்சுளா, ரோஜா முத்தையன், ஆண்டிபாண்டி, தமிழ்சிவா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
திருவனந்தபுரம் பல்கலை கல்லுாரி பேராசிரியர் சீனிவாசன் பேசுகையில், ''உலக மொழிகளில் அதிக தாக்குதல்களைப் பெற்ற மொழி தமிழ் மொழி மட்டும் தான். தன் கட்டமைப்பை இழக்காமல் உள்ள தமிழ்மொழி சிறந்தது' என்றார்.
1-5ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் தொடக்கப் பள்ளிகளில் தமிழில் கற்க சட்டம் இயற்ற வேண்டும் தீர்மானம் இயற்றப்பட்டது. கவிஞர்கள் கணேசன், ரகுநாதன், தமிழ்பித்தன், எழுத்தாளர் சரவணன், மணியம்மை பள்ளி முதல்வர் அமுது ரசனி, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்ற ஒருங்கிணைப்பாளர் அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

