/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்புகளால் அலறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
/
ஆக்கிரமிப்புகளால் அலறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
ஆக்கிரமிப்புகளால் அலறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
ஆக்கிரமிப்புகளால் அலறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2025 05:59 AM

பேரையூர்; பேரையூரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் உள்ளனர்.
பேரையூர்- - - உசிலம்பட்டி ரோட்டில் 20 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்பால் ரோடு குறுகிவிட்டது. இதேபோல் வத்ராப் ரோடு, சிலைமலைபட்டி ரோடு, டி.கல்லுப்பட்டி ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நடந்து செல்வதற்கென்று தனிபாதை ஏதும் அமைக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றுவதற்காக சர்வேயர் மூலம் அளந்து குறியீடு செய்வது பலமுறை நடந்துள்ளது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
அரசியல்வாதிகளின் தலையீட்டால் ஆக்கிரமிப்பு அகற்ற முடியாமல் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சித் துறையினர் உள்ளனர். பேரூராட்சி வசம் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துவதற்கு பதிலாக டூவீலர், கார்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் நிற்கும் இடங்களில் டூவீலர்கள் கார்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வேறு உள்ள மார்க்கத்தில் நிற்கின்றன.
இதனால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். பேரூராட்சியினர் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் உள்ளனர். நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். ஆனால் பேரையூரில் மட்டும் சாலைகள் குறுகி கொண்டே செல்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.