/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.சாண்ட் விலை ரூ.1000 குறைப்பு கண்துடைப்பு: மதுரையில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 30, 2025 05:42 AM

மதுரை; கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து மதுரையில் மாவட்ட அனைத்து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை கட்டுமான பொறியாளர்கள் சங்க (ஏ.எம்.சி.இ.,) தலைவர் பொன் ரவிச்சந்திரன் தலைமை நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில் எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை உயர்த்தியுள்ளனர். இதனால் அடுத்தடுத்து சிமென்ட், செங்கல், கிராவல், சானிட்டரி, கம்பிகள், கட்டட அனுமதி கட்டணம், லாரி வாடகை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் வீடுகட்டுவோர், பொறியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தான் ஆந்திரா, கேரளாவுக்கு எம்.சாண்ட் செல்கிறது. ஆந்திராவில் ஒரு யூனிட் ரூ.4000-க்கும், கேரளாவில் ரூ.2500-க்கும் விற்கப்படுகிறது. ஆனால் இங்கு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. 3 யூனிட் கொண்ட ஒரு லோடு எம்.சாண்ட், லாரி வாடகையுடன் ரூ.22 ஆயிரம். தமிழக அரசின் ரூ.1000 விலை குறைப்பு என்பது கண்துடைப்பு. தற்போதைய விலை உயர்வு, கட்டுமானத் தொழிலையே முடக்கியுள்ளது. அரசு தீர்வு காணாவிட்டால் மாநில அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் அறிவழகன், வெற்றிக்குமரன், சஞ்சய், சிவக்குமார், தண்டபாணி, முன்னாள் தலைவர் வெங்கட்ராமன், பொறியாளர் சங்கத் தலைவர்கள் செந்தில்குமார், லெனின், மதுரை கிரடாய் தலைவர் முத்துவிஜயன், பி.ஏ.ஐ., தலைவர் ரங்கராஜ், பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.