/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப பயிற்சி
/
எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப பயிற்சி
ADDED : மே 23, 2025 12:26 AM
மதுரை:மதுரை புதுார் தொழிற்பேட்டையில் மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அலைபேசி பழுது நீக்க பயிற்சி மே 26 முதல் ஜூன் 13 வரை நடைபெறும். டூல்ஸ் கிளாஸ், ஓ.எஸ்.அப்டேட், காம்பொனன்ட்ஸ், டி-அசெம்பிளிங்க் மற்றும் அசெம்பிளிங்க், பேட்டரி மற்றும் மதர்போர்டு, டச் மற்றும் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ட்ரேஸ் ஒர்க், பேக்கப் டேட்டா பராமரிப்பு விளக்கம் இடம்பெறும். கட்டணம் ரூ.3540. எஸ்.சி/எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு.
டி.டி.எஸ்., ரிட்டர்ன் பயிற்சியில் டி.டி.எஸ்., யாரால் எப்போது பிடித்தம் செய்ய வேண்டும். அரசுக்கு எப்போது, எப்படி டி.டி.எஸ்., தொகை செலுத்துவது, ரிட்டர்ன் தாக்கல் செய்வது, சான்று பற்றிய விளக்கம் அளிக்கப்படும். மே 31 மற்றும் ஜூன் 1 ல் பயிற்சி நடைபெறும். கட்டணம் ரூ.2360.
பெண்களுக்கான மெஹந்தி, சேலை அலங்காரம் பயிற்சியில் மெஹந்தி மிக்ஸிங், புள்ளி மற்றும் கோடு டிசைன், அட்வான்ஸ்டு டிசைன் பயிற்சி கொடுக்கப்படும். சேலை அலங்காரத்தில் புதிய உத்திகள், குறுகிய காலத்தில் அலங்காரம் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்படும். மே 29, 30, 31 ல் பயிற்சி நடைபெறும். கட்டணம் ரூ.500.
விருப்பம் உள்ளவர்கள் போட்டோ, கல்வித் தகுதி சான்று நகல், பட்டியல் வகுப்பினராக இருந்தால் ஜாதி சான்று, ஆதார் நகலுடன் எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு அலுவலக விரிவக்க மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு 86956 46417, 86670 65048ல் தொடர்பு கொள்ளவும்.