ADDED : ஜன 07, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான (எம்.எஸ்.எம்.இ.) தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவன மதுரை கிளை சார்பில் புதிய தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து அலுவலர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி மதுரையில் நேற்று துவங்கியது.
இந்தியா முழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.இ. அலுவலர்கள் பங்கேற்றனர். மதுரை உதவி இயக்குநர் தினகரன் வரவேற்றார். மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கணேசன், எம்.எஸ்.எம்.இ., டில்லி இணை இயக்குநர்கள் சஞ்சய் குமார், குல்தீப் சிங், ரூபி புட் புராடெக்ட்ஸ் இயக்குநர் சம்பத் பேசினர். உதவி இயக்குநர் பாலகுரு நன்றி கூறினார். ஜன.10 வரை பயிற்சி நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.