நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் உச்சிமாகாளியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்றுமுன்தினம் பக்தர்கள் கொண்டு சென்ற பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் நேற்று கோயிலில் இருந்து முளைப்பாரி, பூத்தட்டு, அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு ரதத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று (ஜூலை 17) முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், அன்னதானம் மற்றும் தீர்த்தவாரியும், ஜூலை 22 மறு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.