/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முள்ளிப்பள்ளம் பள்ளிக்கு பாதுகாப்பில்லை
/
முள்ளிப்பள்ளம் பள்ளிக்கு பாதுகாப்பில்லை
ADDED : அக் 09, 2025 04:43 AM

சோழவந்தான் : 'முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் இடிந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்' என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி கணேசன் கூறியதாவது: தென்கரை - குருவித்துறை ரோட்டின் அருகே பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஐநுாறுக்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியைச் சுற்றிலும் 'காம்பவுண்ட்' சுவர் கட்டப்பட்டது.
இதையொட்டி ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்தன. ஓராண்டுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சுற்றுச்சுவர் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் அந்தச் சுவர் பலமிழந்து இருந்தது. ஆக்கிரமிப்பை அகற்றும் போது அச்சு வரின் ஒரு பகுதி 20 மீ., நீளத்திற்கு இடிந்தது. தற்போது பள்ளிக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
இப்பகுதியில் ஏற்கனவே தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் அவை பள்ளிக்குள் சாதாரணமாக உலா வருகின்றன.
இதனால் மாணவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இரவில் சமூகவிரோதிகள் மது அருந்தவும் பள்ளிக்குள் வருகின்றனர்.
மாணவர்கள் தேவையின்றி வெளியே செல்லாமல் இருக்க இடைவெளியில் 'பேவர் பிளாக்' கற்களை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இடிந்த சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.