ADDED : டிச 23, 2024 05:16 AM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு தமிழ்த்துறை சார்பில் 'இளவேனில் 2024' என்ற தலைப்பில் அனைத்து துறை மாணவர்களுக்கு இடையேயான பல் திறன் போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடும் தமிழும், நமது கல்லுாரியின் பெருமை, போதை இல்லா சமூகம், கல்லுாரியின் அழகு, வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மதுரையின் பெருமை, பெண்கள் நாட்டின் கண்கள் என்ற தலைப்புகளில் பல் திறன் போட்டிகள் நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் பரிமளா வரவேற்றார். 23 துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், கம்பி கோலம், நெருப்பில்லா சமையல், மவுன மொழி நடிப்பு, நாட்டுப்புற குழு நடனம், புகைப்படம் எடுத்தல், காகித ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற கணிதவியல் உயராய்வு துறையினர் சாம்பியன் கோப்பை வென்றனர்.
பரிசளிப்பு விழாவுக்கு கல்லுாரிச் செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்து பரிசு வழங்கினார். இயக்குனர் பிரபு, டீன் அழகேசன் பங்கேற்றனர். மாணவர் மன்றத் தலைவர் தாமரை, செயலாளர் காவியா, பேராசிரியர் ரஞ்சித் குமார் ஒருங்கிணைத்தனர்.

