ADDED : மார் 08, 2024 01:09 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை, கணினி தகவல் தொழில் நுட்பதுறை, கணினி பயன்பாட்டு துறை, செயற்கை நுண்ணறிவியல் துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு மாநில பல்திறன் போட்டிகள் நடந்தது.
கல்லுாரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா வரவேற்றார். எச்.சி.ஐ., டெக்னாலஜிஸ் இணை பொது மேலாளர் வெங்கடவேலன் பேசினார். மதுரை, விருதுநகர், திருச்சி. சிவகங்கை, திண்டுக்கல், சாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 37 கல்லுாரிகளின் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு காகித விளக்கக் காட்சி, மென்பொருள் பிழைத்திருத்தம், வினாடி வினா, உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள், குறும்படம், செல்பி சாவடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல் இடம், மதுரை அரபிந்தேமீரா கல்வியியல் கல்லுாரி இரண்டாம் இடம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் கார்த்திகா, வாசுகி, அமுதா, விஜயலெக்ஷ்மி, விஜயகுமார் ஏற்பாடுகள் செய்தனர். உதவி பேராசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

