நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு மாநில அளவில் பல்திறன் போட்டிகள் நடந்தன.
கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மணிமுத்து வரவேற்றார். பேராசிரியர் செல்வமூர்த்தி அறிமுக உரையாற்றினார். கனரா வங்கி முன்னோடி வங்கி கோட்ட மேலாளர் அனில் பேசினார். 19 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டமும், லேடி டோக் கல்லுாரி இரண்டாம் இடமும் வென்றன. பேராசிரியர் பாண்டீஸ்வரி நன்றி கூறினார்.

