/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சந்தையால் மோதுகின்றன நகராட்சியும், ஊராட்சியும் * சண்டையால் நாறுது திடல்

ADDED : ஜூலை 16, 2025 01:40 AM

உசிலம்பட்டி : தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் உசிலம்பட்டி சந்தைத் திடல் சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
உசிலம்பட்டி சந்தைத் திடல் 7 ஏக்கர் பரப்பில் உள்ளது. நுாற்றுக்கணக்கான கடைகள், தினசரி சந்தை, வாரச்சந்தை, காய்கறி மொத்த விற்பனை கடைகள், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகங்கள், நுாலகம் என தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
சந்தை திடலை பராமரிப்பது யார் என்பதில் நகராட்சி, ஊராட்சிக்கு இடையே போட்டி நிலவுவதால் 2 ஆண்டுகளாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். வடிகால் வசதி துார்ந்து போனதால் கழிவுநீர் முழுவதும் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது மட்டும் கண்துடைப்பாக ஆங்காங்கே சிறு பணிகளை மேற்கொள்கின்றனர். அதன்பின் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடுவதால் ரோட்டில் சாக்கடை தேங்கி சந்தைக்குள் வரும் மக்களுக்கு சுகாதார கேடை ஏற்படுத்துகிறது. வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.