ADDED : நவ 01, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதித்துள்ளது.
குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள், புதிய கட்டட அனுமதி உள்ளிட்ட பொதுமக்களுக்கான அனைத்து பணிகளும் இந்த அலுவலகம் மூலமே நடக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் இருந்தாலும் செயல் அலுவலர் இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஓராண்டாக செயல் அலுவலர் இல்லை. பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
தற்போது மழைக்காலம் என்பதால் பணிகளை நிறைவேற்றுவது சிரமமாக உள்ளது. நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.