ADDED : ஏப் 03, 2024 12:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருநெல்வேலி பேட்டை பட்டமுத்து 46.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கண்ணன்45. இருவரும் மதுரையில் சமையல் வேலை செய்தனர். பட்டமுத்து கேலி, கிண்டல் செய்தார். அவரை கோபத்தில் கல்லால் தலையில் அடித்து கண்ணன் 2018ல் கொலை செய்தார். அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். கண்ணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து மதுரை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார்.

