UPDATED : ஜூன் 10, 2026 06:20 PM
ADDED : ஜூன் 10, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை வலையப்பட்டி சின்னக் கருப்பு மகன் அம்சகொடி 36. திருமணமாகாதவர். திருப்பூரில் கொத்தனார் வேலை பார்த்தார். இவர் அதே பகுதி கார்த்திக் என்பவரிடம் ஜல்லிக்கட்டு காளை வாங்கி தருவதாக பணம் பெற்றுள்ளார். நான்காண்டுகளாக பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 9 அம்சக்கொடி மதுரை வந்தார். கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அம்சகொடியிடம் பணத்தை கேட்டனர். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு தாக்கப்பட்டதில் அம்சகொடி சம்பவ இடத்திலேயே இறந்தார். கார்த்திக், அவர்களது நண்பர்களிடம் பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
