
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் அரவிந்த் சரத் 33. மனைவியை பிரிந்த நிலையில் தன்னுடன் கட்டட வேலைபார்த்த மணிகண்டன் மனைவி பூபதியுடன் 29, பழகினார். இதை கண்டித்த பூபதியின் அண்ணன் வாசுதேவனை கொலை செய்தார்.
சில மாதங்களாக அதலையில் இரு மகள் களுடன் இருவரும் வசித்த னர். தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்த அரவிந்த் சரத் தலையில் செப்.,17 இரவு பூபதி கல்லை துாக்கி போட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.
ஏற்கனவே பூபதியை சமயநல்லுார் போலீசார் கைது செய்திருந்த நிலையில் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டது.