ADDED : ஜூலை 25, 2025 03:37 AM

அலங்காநல்லுார்: 'இன்ஸ்டாகிராம்' மூலம் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், வாலிபர் கொலையான சோக சம்பவம் அலங்காநல்லுாரில் நடந்துள்ளது.
அலங்காநல்லுார் அருகே டி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் 22, கொண்டையம்பட்டி கல்குவாரியில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார்.
இங்கு 3 மாதங்களுக்கு முன் வேலை பார்த்த பாலமேடை அடுத்த கோணப்பட்டி டிரைவர் ராஜேஷ் 35, என்பவரின் மனைவி காயத்திரியுடன் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த ராஜேஷ் கண்டித்துள்ளார்.
20 நாட்களுக்கு முன் மனைவி காயத்திரி இரு மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் யோகேஸ்வரன், ராஜேஷ் மனைவி புகைப்படத்துடன் வீடியோ பதிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், நேற்று அதிகாலை குவாரிக்கு வேலைக்கு வந்த யோகேஸ்வரனை கட்டையால் அடித்து கொலை செய்தார்.
ராஜேஷை இன்ஸ்பெக்டர் வளர்மதி கைது செய்தார்.