/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சத்குரு சங்கீத சமாஜத்தில் சங்கீத போட்டிகள்
/
சத்குரு சங்கீத சமாஜத்தில் சங்கீத போட்டிகள்
ADDED : அக் 26, 2025 05:35 AM
மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தின் 74வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கீத போட்டிகள் நவ., 22ல் நடக்கின்றன.
அன்று காலை 9:00 மணி முதல் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் போட்டிகள் நடக்கின்றன. இதில் இருபாலரும் பங்கேற்கலாம். 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் 'சப் - ஜூனியர்', 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 'ஜூனியர்', 16 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் 'சீனியர்' என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேற்கண்ட வயது வரம்பிற்கு உட்பட்டு ஒருவர் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கலாம். விசேஷ பாடல்கள் போட்டிகளில் சீனியர் பிரிவினர் மட்டுமே பங்கேற்க முடியும்.
சமாஜத்தின் கடந்த போட்டிகளில் முதல் பரிசு வென்றவர்கள் மீண்டும் அதே போட்டிகளில் பங்கேற்கக்கூடாது. ரேடியோ, டிவி, சபா, மேடை கச்சேரிகளில் பங்கேற்போர், சங்கீதத்தை முழு அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்போருக்கு அனுமதி இல்லை.
விருப்பமுள்ளவர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமாஜ அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ., 15 மாலை 5:00 மணிக்குள் கிடைக்கவேண்டும்.
வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் ஜனவரியில் ஆண்டு விழாவின் போது வழங்கப்படும். போட்டிகளின் நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு 0452 - 253 0858ல் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை கவுரவ செயலாளர்கள் ராஜாராம், வெங்கட்ட நாராயணன் செய்து வருகின்றனர்.

