/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு உத்தரவிட்ட பின்பும் மயானம் தராத மாநகராட்சி முஸ்லிம்கள் மனு
/
அரசு உத்தரவிட்ட பின்பும் மயானம் தராத மாநகராட்சி முஸ்லிம்கள் மனு
அரசு உத்தரவிட்ட பின்பும் மயானம் தராத மாநகராட்சி முஸ்லிம்கள் மனு
அரசு உத்தரவிட்ட பின்பும் மயானம் தராத மாநகராட்சி முஸ்லிம்கள் மனு
ADDED : அக் 24, 2025 02:31 AM
மதுரை: மதுரை ஆனையூரில் இறந்தோர் உடலை அடக்கம் செய்ய இடம் கேட்டு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திடம் முஸ்லிம்கள் மீண்டும் மனு கொடுத்தனர்.
ஆனையூர் சிலையனேரி மஜூதே இப்ராஹிம் ஜூம்மா தொழுகை பள்ளிவாசல் தலைவர் பாபுஜி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஆனையூரில் இறந்தோர் உடலை 7 கி.மீ., க்கு அப்பால் அடக்கம் செய்ய வேண்டி இருந்தது. இடநெருக்கடியால் அங்கும் புதைத்த உடல் மீது மீண்டும் உடல்களை புதைக்கும் நிலை உள்ளது.
இதற்காக ஆனையூரில் அடக்க தலத்திற்கு இடம் கேட்டு கலெக்டர், அமைச்சர், சிறுபான்மையினர் கழகம் என பலதரப்பிலும் மனு கொடுத்தோம். இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், ஆனையூரில் 20 சென்ட் நிலம் ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த இடத்தை மாநகராட்சி தரவேண்டும். இதுவரை இடம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்கிய நிலையில், ஏற்கனவே புதைத்த உடல்கள் மட்குவதற்கு நாளாகிறது. இதனால் விரைவாக நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தோம், என்றனர்.