/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊழல்வாதிகளுக்கு எதிராக எனது அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி
/
ஊழல்வாதிகளுக்கு எதிராக எனது அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி
ஊழல்வாதிகளுக்கு எதிராக எனது அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி
ஊழல்வாதிகளுக்கு எதிராக எனது அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி
ADDED : மார் 21, 2024 02:27 AM
புதுடில்லி: 'சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஏன் செயல்படவில்லை என மக்கள் எழுப்பிய காலம் மாறி, அந்த அமைப்புகள் தங்களுக்கு எதிராக ஏன் செயல்படுகிறார்கள் என ஊழல்வாதிகள் கேள்வி எழுப்பும் நிலை தற்போது நிலவுகிறது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் தனியார் நிறுவனம் சார்பில் 'எழுச்சி பெறும் இந்தியா' என்ற தலைப்பில் நேற்று நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தற்போதைய புதிய இந்தியா, பயங்கரவாதத்தின் காயங்களை பொறுத்துக்கொள்ளாது; மாறாக அந்த காயங்களுக்கு காரணமானவர்களுக்கு பாடம் கற்பிக்கிறது. பாதுகாப்பான நாடுதான் வளர்ந்த நாட்டின் அடிப்படை. இதுவே இன்றைய இந்தியாவின் அடையாளம், இதுவே எழுச்சி பெறும் இந்தியா. எனது அரசு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு வரைபடத்தை உருவாக்குவதிலும், அதன் மூன்றாவது ஆட்சியின் முதல் 100 நாட்களுக்கான நிகழ்வுகளை திட்டமிடுவதிலும் மும்முரமாக உள்ளது.
கடந்த 2014க்கு முன் நிலைமை என்னவாக இருந்தது, ஒவ்வொரு வீட்டிலும் ஊழல் பெரிய பிரச்னையாக இருந்தது. நாட்டின் மானம் வீழ்ச்சியடைந்தது. அப்போதைய அரசு, அதை பாதுகாப்பதில் மும்முரமாக இருந்தது. சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பினர். இப்போது நிலைமை மாறியுள்ளது. ஏன் எங்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கிறது என முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே எனது அரசின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

