/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்தாண்டுகளுக்கு முன் என் அடையாளம்: அமைச்சர் 'பளிச்'
/
பத்தாண்டுகளுக்கு முன் என் அடையாளம்: அமைச்சர் 'பளிச்'
பத்தாண்டுகளுக்கு முன் என் அடையாளம்: அமைச்சர் 'பளிச்'
பத்தாண்டுகளுக்கு முன் என் அடையாளம்: அமைச்சர் 'பளிச்'
ADDED : அக் 28, 2025 03:58 AM
மதுரை: பத்தாண்டுகளுக்கு முன் நான் பொது வாழ்க்கையில் இல்லை; நிதி, வங்கித்துறை தான் என் அடையாளமாக இருந்ததுஎன அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு , ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிறைவு விழா நடந்தது. அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: நான் பத்தாண்டுகளுக்கு முன் பொதுவாழ்க்கையில் இல்லை. தனி நபராக நிறைய நாடுகளில் பணிபுரிந்தேன். நிதி, வங்கித்துறை தான்என் அடையாளமாக இருந்தது. நான் அரசியலுக்கு வந்து 9 ஆண்டுகளாகி விட்டது. அமைச்சராகி 4 ஆண்டுகளாகி விட்டது. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், என்னிடம் நீங்கள் பேசும் காணொலியை சமூக ஊடகத்தில் பார்த்து உள்ளேன் என மக்கள் கூறுகிறார்கள். ஊடகங்களின் தாக்கம் அதிகம். இதனை மனதில் வைத்துக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும்என்றார்.
கலெக்டர் பிரவீன்குமார், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவ்வை அருள், தமிழ்ச்சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா பங்கற்றனர்.

