நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 26. வடமாநிலத்தில் தோசைக்கடை நடத்தியவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். உசிலம்பட்டி போத்தம்பட்டி ரோட்டில் கல்யாணிபட்டி விலக்கு அருகே உள்ள பாலத்தின் அடியில் இறந்து கிடந்தார்.
நேற்று இரவு 8:00 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் அங்கு அலைபேசி அழைப்புச் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது பிரேம்குமார் இறந்தது தெரிந்தது. உசிலம்பட்டி போலீசார் உடலை மீட்டு அவர் எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.

