/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் 'நாப்கின்' எரிக்க இயந்திரம்
/
அரசு மருத்துவமனையில் 'நாப்கின்' எரிக்க இயந்திரம்
ADDED : பிப் 20, 2025 05:36 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுகளில் கர்ப்பிணிகள், மகளிர் நல நோய்களுக்கு தினமும் 200 பேர் சிகிச்சை பெறுகின்றனர். குறைந்தது 100 பேர் உள்நோயாளியாக தங்குகின்றனர்.
நாப்கின்களை சில பெண்கள் கழிப்பறைக்குள்ளேயே வீசுவதால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படுகிறது. ஏற்கனவே உள்ள சிறிய இயந்திரம் அதிகளவு நாப்கின்களை எரிக்க முடியாமல் பழுதடைகிறது. இதற்காக பெரிய இயந்திரம் வாங்கப்பட உள்ளதாக டீன் அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாப்கின்களை கையாள்வது சவாலான விஷயமாக உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், நர்சிங் பள்ளி, கல்லுாரி, பார்மசி கல்லுாரி மாணவிகள் பயன்படுத்தும் வகையில் ஆங்காங்கே சிறிய 'இன்சினரேட்டர்கள்' வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாப்கின்கள் முறையாக எரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. மருத்துவமனையில் லோடு தாங்காமல் இயந்திரம் பழுதடைகிறது. பெரிய நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் இயந்திரம் வழங்க கேட்டுள்ளோம். மகப்பேறு மட்டுமின்றி குழந்தைகள் நலப்பிரிவிலும் குழந்தைகளுடன் பெண்கள் தங்குகின்றனர். அங்கு வைக்க நிறுவனங்கள் முன்வரலாம் என்றார்.