/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.பி., கார் மீது பைக்கை மோதிய 'போதை' வார்டன்
/
எஸ்.பி., கார் மீது பைக்கை மோதிய 'போதை' வார்டன்
ADDED : மார் 17, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் எஸ்.பி., மதிவாணன் கடந்த 14ம் தேதி இரவு, சத்துவாச்சாரியிலுள்ள எஸ்.பி., அலுவலகத்திலிருந்து, வேலப்பாடியிலுள்ள தன் வீட்டுக்கு சென்றார்.
அண்ணா சாலை சிக்னலில் வாகனம் நின்றபோது, ஒரு பைக் மோதியது. வேலுார் தெற்கு போலீசார், பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். வேலுார் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றும் விஜயகுமார், 37, என, தெரிந்தது. அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது.
வேலுார் தெற்கு போலீசார், விஜயகுமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.