நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : குஜராத் மாநிலத்தை பூர்வீகமாககொண்டு 1870ல் தொழிலுக்காக மதுரை வந்தவர்கள் ஹலாய் மேமன் சமூகம். மதுரையின் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்து இங்கு நிரந்தரமாக குடியேறினர்.
மகளிர் நலன், மகளிர் உரிமை, அதிகாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 1985 ஆம் ஆண்டு ஹலாய் மேமன் மகளிர் குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு ஹலாய் மேமன் மகளிர் குழு மெஹ்ரூன் இஸ்மாயில் தலைமையில் இன்று தேசியத் திருவிழா நடத்த உள்ளது.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதி கவிமணி தெருவில் உள்ள ஹலாய் மேமன் மகளிர் குழு அலுவலகத்தில் நடக்கும் இந்த விழாவில்சைவ, அசைவ உணவுகளில் பெண்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.
இன்று காலை 9:00 மணி முதல் 11:00 வரை இத்திருவிழா நடக்கிறது. இரவு- 8:00 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.