/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய செஸ் போட்டி: கல்வி அணி 2ம் இடம்
/
தேசிய செஸ் போட்டி: கல்வி அணி 2ம் இடம்
ADDED : அக் 17, 2025 02:07 AM
சோழவந்தான்: சோழவந்தான் நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி அணி தேசிய அளவிலான செஸ் போட்டியில் 2ம் இடம் பெற்றது..
ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் 3வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான 18 வயதிற்குட்பட்டோருக்கு செஸ் சாம்பியன்ஷிப்- 2025 போட்டிகள் நடந்தன.
பல மாநிலங்களில் இருந்து 188 பள்ளி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் மதுரை கல்விப் பள்ளி அணியினர் சிறப்பாக விளையாடி 9 சுற்றுகளில் 8 முறை தொடர் வெற்றி பெற்று தேசிய அளவில் 2ம் இடம் (ரன்னர் - அப்) பெற்றனர்.
இவ்வணியின் அருள்பிரகாஷ், ஜெய்தம்பரீஸ், யஷ்வந்த், தர்ஷ் சிறப்பான ஆட்டத்தால் இச்சாதனை புரிந்தனர். மேலும் தனிப்பட்ட பிரிவில் தர்ஷ், அருள்பிரகாஷ் வெள்ளி வென்றனர். மாணவர்களை பள்ளி முதல்வர் அருணா, துணை முதல்வர்கள் அபிராமி, அகிலா, தேவி பாராட்டினர்.

