/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய பக்தி வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய பக்தி வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 13, 2025 03:55 AM
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய பக்தி வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை தங்கமயில் ஜூவல்லர்ஸ் இணை இயக்குனர் ரமேஷ் துவக்கி வைத்தார். தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை இணை இயக்குனர் உச்சிமகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது: முதல் நாளில் மதுரை நகர் முழுக்க பயணம் மேற்கொள்ளும். காந்தி, நேதாஜி, விவேகானந்தருக்கு அவர்களின் வாழ்வில் மதுரை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது.
அந்த அடிப்படையில் இங்கு வாகன பயணத்தை துவக்கியுள்ளோம். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்வோம். 2025ல் மதுரையில் தொடங்கிய பயணம் 2047 ல் நிறைவு பெறும்.
பள்ளி, கல்லுாரிகளில் நிறுத்தப்பட்டு தேசப்பற்று, வரலாறு, சுதந்திர தாக்கம் குறித்த கருத்தரங்கம் நடத்தப்படும். பயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் தேசபக்தி, தெய்வீகம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் கொள்கை. கடந்த கால சுதந்திர போராட்ட நினைவுகள், நிகழ்கால தலைமுறை, எதிர்கால இளைஞர்களை இணைக்கும் பாலமாக இந்த வாகனம் இருக்கும்.
அனைவரும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தேசியகொடி அணிய வேண்டும் என்றார்.