/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய ஹேண்ட்பால் மதுரைக்கு வெண்கலம்
/
தேசிய ஹேண்ட்பால் மதுரைக்கு வெண்கலம்
ADDED : அக் 12, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஐதராபாத்தில் தேசிய ஹேண்ட்பால் கூட்டமைப்பு சார்பில் நடந்த தேசிய ஹேண்ட்பால் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற மதுரை மாணவி இனியா வெண்கல பதக்கம் வென்றார்.
மதுரை நிர்மலா பள்ளி மாணவி இனியா 12 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் மகாலட்சுமி 18 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் கலந்து கொண்டனர். தேசிய ஜூனியர் போட்டியில் தமிழக அணி வெண்கல பதக்கம் வென்றது. இப்போட்டியில் இனியா வெண்கல பதக்கம் வென்றார். தாளாளர் ஞானசவுந்தரி, தலைமையாசிரியை ஜோஸ்பின்ராணி, இயக்குநர் சுஜாதா ஜாக்குலின், உடற்கல்வி ஆசிரியை கவுரி, பயிற்சியாளர் குமரேசன், மாவட்ட ஹேண்ட்பால் சங்க நிர்வாகிகள் சந்திரமோகன், ரஞ்சித்குமார், பிரகாசம் பாராட்டினர்.