/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தியாகராஜர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
தியாகராஜர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : அக் 12, 2025 06:34 AM
மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பாண்டியராஜா வரவேற்றார். செயலர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்துப் பேசுகையில், ''இளைஞர்கள், சவால்களை எதிர்கொண்டு அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும். மேற்கத்திய உலகம், இந்திய இளைஞர்களின் எழுச்சி கண்டு அஞ்சுகிறது. கல்லுாரிப் பட்டம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், உலக சவால்களை எதிர்கொள்ளும் கருவியாக இருக்க வேண்டும்'' என்றார்.
சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''வாழ்க்கைத் தேர்வில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டிய அதே வேளையில், தொலைநோக்கு பார்வையும் கொண்டிருக்க வேண்டும். மாற்றங்களுக்கு ஏற்ப பட்டதாரிகள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே வளமையான எதிர்காலம் அமையும்'' என்றார்.
கல்லுாரி பாடத்திட்ட மேம்பாடு டீன் ஈஸ்வரன் நன்றி கூறினார். தங்கப் பதக்கம் வென்ற 32 பேர்உட்பட 1791 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.