
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் இஷின்ரியூ கராத்தே பள்ளி சார்பில் தேசிய கராத்தே போட்டி நடந்தது.
இதில் பங்கேற்ற மதுரை அச்சம்பத்து கேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தாரிகா, திலகரன், மகாஷினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். காசிவன், சம்யுக்தா, மஹிமா, மிருதுபாஷினி, மதுஷா 2ம் பரிசும், அக்சதியா, மாதேஷ் நிகிலன், கபிலன், தனுஷ், நிகிதா, அமர் பிரகாஷ் ஆகியோர் 3ம் பரிசு பெற்றனர். முதன்மை முதல்வர் ஜாய்ராஜன், கேரன் கல்வி குழும செயல் தலைவர் பிரபாகரன், முதல்வர் மோசஸ், மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளித் தலைமை பயிற்சியாளர் ராஜா பாராட்டினர்.