ADDED : அக் 17, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் பள்ளிகள் சார்பில் பெங்களூருவில் தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் மதுரை லட்சுமி பள்ளி மாணவி லக் ஷிதா 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றார். 26 கிலோ எடை பிரிவின் முதல் சுற்றில் கர்நாடக மாநில மாணவியை 8 -- 0 புள்ளிகளில் வீழ்த்தினார்.
அரையிறுதியில் உ.பி., மாணவியை 9 -- 1 புள்ளிகளிலும் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மாணவியை 7- -2 புள்ளிகள் வித்தியாசத்திலும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மத்திய பிரதேசம் இந்துாரில் டிச. 26 முதல் 29 வரை நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வானார். முதல்வர் சுபாஷினி, பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.