
மதுரை: கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் மதுரை மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி மாணவர்கள் ஏழு முதல் 17 வயது பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றனர்.
திலக்தரன், சுதர்சன், சாய்ராம், மிருதுபாஷினி, தாரிகா ஆகியோர் முதல்பரிசு பெற்றனர். மணீஷ் வருண், ஆதேஷ், மோனிகா ஸ்ரீ, நித்திஷ் வைபவ், சம்யுக்தா, அஸ்வந்த், மகிமா, அஜய் கார்த்திக், சபரி ராஜ் ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். ஹர்ஜித், துவாரகேஷ், லோஹித், வைதுார்ய வர்ஷினி, குருநாத், அக்ஷதியா, காசிவின், ரிஷிகா, மோஹித், சவுமிக் வர்ஷன், ஹர்ஷித், முகிலன் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர்.
பிளாக்பெல்ட் 11 வயது பிளாக் பெல்ட் பிரிவில் பிரஜா, 12 வயது பிரிவில் பார்க்கவன், 13 வயது பிரிவில் ஆர்த்தி, 17 வயது பிரிவில் சாய்சரண், சக்திஸ்ரீ முதல் பரிசு பெற்றனர். 14 வயது பிரிவில் டாம் குரூஸ் பிரபு 2ம் பரிசு பெற்றார். தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் பி.ராஜா, ஒருங்கிணைப்பாளர் டி. ராஜா, பயிற்சியாளர் அஜய் கிருஷ்ணா பாராட்டினர்.

